பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த சந்தேகத்தில் 11 பேரை இந்திய அரசாங்கம் கைது செய்திருக்கிறது.
அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைத்தது 60 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 5 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களும் நடந்தன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான மோதலில் ஈடுபட்டன. பின் இரு நாடுகளும் யுத்த நிறுத்த ஒத்தந்தத்துக்கு உடன்பட்டன.
இந்நிலையில், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 11 பேரை சந்தேகத்தின் பேரில் இந்தியா கைது செய்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவராவார். இவருக்கு யூடியூபில் 3 இலட்சத்து 77 ஆயிரம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தற்போது இவரது சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இந்திய அரசால் முடக்கப்பட்டன.
அத்துடன், இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் மாநில பொலிஸார் அறிவித்திருக்கிறது.
மாணவர், பாதுகாவல் அதிகாரி மற்றும் தொழிலதிபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.