லிவர்பூல் எஃப்சி பிரீமியர் லீக் வெற்றிக் கோப்பையை கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்காணவர்கள் திரண்டிருந்த அணிவகுப்பில் கார் ஒன்று மீது மோதியது.
இதில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்களில் இருவர் படுகாயமடைந்தனர் என்றும் தெரிவித்த பொலிஸார்,
நான்கு சிறுவர்கள் உட்பட 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.
இந்த சம்பவத்தில் 53 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சாரதி என்று நம்பப்படுகிறது.
‘அது எங்களை அங்குலம் கணக்கில் தவறவிட்டது’ என இந்த சம்பவத்தின் போது அணிவகுப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (26) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தால் அணிவகுப்பு கொண்டாட்ட நிகழ்வு தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
“நாங்கள் தற்போது லிவர்பூல் நகர மையத்தில் ஒரு வீதி விபத்து குறித்த தகவல்களைக் கையாண்டு வருகிறோம். கார் சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டதுடன், ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவசர சேவைகள் தற்போது சம்பவ இடத்தில் உள்ளன. மேலும் தகவல்கள் கிடைத்ததும் வெளியிடுவோம்” என நகர பொலிஸார் தெரிவித்தனர்.