தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்தர்கள் இந்தியாவின் இமயமலை நகரமான தர்மசாலாவில் திரண்டனர்.
திபெத்திய ஆன்மீகத் தலைவர் பாரம்பரிய உடைகள் மற்றும் மஞ்சள் நிற போர்வையில் தோன்றி, இரண்டு துறவிகளின் உதவியுடன் சிரித்துக்கொண்டே நடந்து சென்றார்.
மலை உச்சியில் உள்ள கோயில்கள் பாடல்களால் எதிரொலித்தன, அதே நேரத்தில் நடனக் குழுக்கள் கைதட்டல் மற்றும் இசையுடன் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நாடுகடத்தப்பட்ட தலைவரை கௌரவிக்க இந்திய அமைச்சர்கள், ஹொலிவுட் நடிகர் ரிச்சர்ட் கியர் உள்ளிட்ட நீண்டகால ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.
இதன்போது, பேசிய அவர், “இதுவரை என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் பலனளித்துள்ளன. நாம் நம் நாட்டை இழந்துவிட்டோம், இந்தியாவில் ஒரு அகதியாக, தர்மசாலாவில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது.” என்று கூறினார்.