செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஸ்பெயின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

0 minutes read

ஸ்பெயினின் கேட்டலோனியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓசோனா பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் சேமிப்பு அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பிராந்திய தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும், அவர்களில் சிலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் என்றும் நம்பப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சில உடல்கள் தீயில் கருகிய நிலையில் காணப்பட்டதால், உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கேட்டலோனியா பொலிஸ் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.