ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கான தொகையை முதல்முறையாக சீன யுவானில் இந்தியா செலுத்தியுள்ளது.
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைத் தவிர்க்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ள நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் (ICICI Bank) ஷாங்காய் கிளை மூலம் இந்தப் பணப் பரிமாற்றம் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்கவும், சர்வதேச வர்த்தகத்தில் புதிய நிதி நடைமுறைகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக வழங்கப்பட்ட தடையில்லா விலக்கு வரும் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் (19) முடிவடைய உள்ள சூழலில், இந்திய நிறுவனங்களின் இந்த நிதி நகர்வு, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.