செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிஜியில் புதிய துறைமுகம் அமைக்க ‘குவாட்’ நாடுகள் தீர்மானம்!

பிஜியில் புதிய துறைமுகம் அமைக்க ‘குவாட்’ நாடுகள் தீர்மானம்!

1 minutes read

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பிஜியில் (Fiji) கூட்டாக புதிய துறைமுகத்தை உருவாக்குவதற்கும், முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ‘குவாட்’ (Quad) நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் புதுடெல்லியில் நடத்திய சந்திப்பில் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, கடந்த 2024 செப்டம்பருக்குப் பிறகு நடைபெற்ற மூன்றாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமாகும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Quad கூட்டணியின் முதல் கூட்டு உள்கட்டமைப்புத் திட்டமாக பிஜி நாட்டுத் துறைமுகத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கருத்து வெளியிடுகையில்,

“பசிபிக் தீவுகளில் நிலவி வரும் போதிய துறைமுகத் திறன் இன்மையைக் கருத்தில் கொண்டு, துறைமுக உள்கட்டமைப்பு விவகாரத்தில் நாங்கள் பிஜியுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்.

தரமான, நெகிழ்வுத்தன்மை கொண்ட உள்கட்டமைப்பை வழங்குவதற்கான எங்களது கூட்டுத் திறனுக்கு இதுவொரு நடைமுறைச் சான்றாகும்” என்றார்.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டை புதுடெல்லியில் நடத்த வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இவ்வருட இறுதிக்குள் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்துவதற்குரிய ராஜதந்திர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.