செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வெனிசுலாவுக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி

வெனிசுலாவுக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி

0 minutes read

“சாதகமான அனைத்து உதவிகளையும் வெனிசுலாவுக்கு வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய பிரதமரின் X பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

“வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து அறியும்போது ஆழ்ந்த வேதனையடைகிறோம்.

இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும், குறிப்பாகத் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்களது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஆதரவாக நாங்கள் உறுதியுடன் துணை நிற்போம்.

இந்தத் துயரமான வேளையில், வெனிசுலாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது” – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.