ஊசி போட்ட டாக்டருக்கு கொரோனா : அச்சத்தில் ஜேர்மன் பிரதமர்.

ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் மருத்துவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஏஞ்சலா மெர்க்கலுக்கு நிமோனியா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி போட்ட டாக்டருக்கு, கொரோனா தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவரின் சுற்றுப்புறத்தில் இருந்தவர் என்ற வகையில், தற்போது ஏஞ்சலா மெர்க்கல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தவாறே அவர் பணிகளை கவனித்து வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனிடையே, மொனாக்கோ நாட்டு அரசுத் தலைவரான இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்