செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று!

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று!

0 minutes read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ட்ராக்டர் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையொட்டி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்தியா முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் குறித்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே மும்பையில் விளம்பரத்துக்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்பவன் நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஆளுநரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.