2
கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.
அந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்த்தரப்பு உறுப்பினர்களால் தாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.