October 4, 2023 6:44 pm

மாணவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் – வைப்பிலிட்டது யார்?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மாணவர்களினால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களுக்கு இவ்வாறு பணம் அனுப்புவதாக பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களின் ஆலோசனைக்கமைய மாணவர்களின் கணக்குகளுக்கு eZ Cash முறையில் பணம் அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு அமைத்தல் தொடர்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்