தமிழர்களுடைய பிரச்சினை பற்றி ஜனாதிபதி பேசா நிலையில் | இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது மீண்டும் பாராளுமன்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார்.

ஆசிரியர்