செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனீவாவில் அமர்வில் உரை!!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனீவாவில் அமர்வில் உரை!!

1 minutes read

ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

அவசரகாலச்சட்டம், இராணுவ மயமாக்கப்படல், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான முன்னேற்றங்கள் குறித்து ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. முதல் நாளிலேயே இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்தது ஆணையாளரினால் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இன்று இணைய வழியூடாக அமர்வில் உரையாற்றவுள்ளார்.

அத்தோடு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை மீதான விவாதம் இன்று இடம்பெறும்போது, ​​உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சிவில் அமைப்புக்கள் தங்கள் நிலைப்பாட்டினை தெரிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.