Wednesday, May 25, 2022

இதையும் படிங்க

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகள் ஊடாக...

ஒரு குடும்பத்தின் மாதச்செலவு 5 ஆயிரம் ரூபாவால் உயர்வு

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளுக்கமைய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் வருடாந்த பணவீக்கம் கடந்த...

தென்னிந்திய சினிமா உலகில் கலக்கும் ஈழத்து இளைஞர் ஜெனோசன்

இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல் “உன் நினைவுகளில்”. காதல் கொண்ட இரு நெஞ்சம் காதலிக்கும் போதும் காதல் பிரிவின் போதும் காணப்படக்கூடிய காதல்வயப்பட்ட முத்தத்தின் காட்சிகளையும்...

புலம்பெயர்ந்தோரின் பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு அவசியம்! | ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு பார்வையாளர் விசாவில் செல்பவர்கள் ‘வெளிநாட்டுப் பார்வையாளருக்கான மருத்துவ காப்பீட்டை’( Overseas Visitor Health Cover) கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை.

புதை குழி | முல்லையின் ஹர்வி

என் தமக்கையும் தனயனும் அங்குதான் மரித்தார்கள் ,இறப்பை அறிந்தேன் நான் - ஆயினும்பிணங்களை பார்க்காமலே!!மீண்டும் அவர்தம் உடலுக்கு,எங்கு...

ஆசிரியர்

ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்!

சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன் பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

ஆனால் தேசியவாத இலங்கையர்களும் மாலைத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கடன்பொறி இராஜதந்திரத்தினுள் சிக்கியிருப்பதையும் உணர்ந்துள்ளதாகவும் ஐரோப்பிய அடிப்படையிலான சிந்தனைக் குழு கூறியுள்ளது.

நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துடன் ஒப்பந்த்தினைப்போன்று சீனா மேலும் முக்கிய பகுதிகளை, வளங்களை சுரண்டுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இலங்கையர்கள் அச்சமடைந்துள்ளதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய சிந்தனைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

‘இருப்பினும், சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது சிறப்புரிமை பெற்ற பரிவாரங்கள் தங்களின் விஜயத்தின்போது இலங்கை மற்றும் மாலைதீவில் காணப்பட்ட பல்வேறு தொற்றுநோய் விதிமுறைகளை கண்டு மட்டும் புருவங்களை உயர்த்தவில்லை.

தேசியவாத இலங்கையர்களும் மாலத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது கொண்டிருந்த ஆழமான வேரூன்றிய அக்கறையை கண்டும் அவர்கள் புருவங்களை உயர்த்தினர்.

அதுமட்மன்றி சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரத்தின் வலுக்கட்டாய பயன்பாட்டின் மூலம் பெருகிவரும் ஆபத்து நிலைமைகளையும் அவர்கள் அறிந்துள்ளனர்’ என்றும் சிந்தனைக் குழு குறிப்பிட்டுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, இந்தியா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புகொள்வதன் மூலம் சீன செல்வாக்கு மற்றும் கடன் சிக்கலை கட்டுப்படுத்த முயன்றார். மாலைத்தீவில் வாங் யீக்கு ஆதரவான மற்றும் அன்பான வரவேற்பு இருந்த போதும் அங்கு அவர் பல வெற்றிகளைப் பெற்றதாகத் தெரியவில்லை.

மாலைத்தீவில் 2018இல் சீனா சார்பு தலைவர் அப்துல்லா யாமீன் மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ், இந்தியாவுடனான கூட்டுவாழ்வு உறவுகளுக்கு துல்லியமாகத் திரும்பினார்.

இந்தியா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புகொள்வதன் மூலம் சீன செல்வாக்கு மற்றும் கடன் சிக்கலைக் கட்டுப்படுத்த சோலி முயற்சித்தார் என்றும் சிந்தனைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையைப் போலவே மாலத்தீவுகளும் சீனாவின் ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாகும், இதை அமெரிக்காவானது சிறிய நாடுகளை சிக்க வைப்பதற்காக சீனாவின் ‘கடன் பொறி’ இராஜதந்திரத் திட்டம் என்று முத்திரை குத்தியுள்ளது.

எனவே, சோலிஹ் தலைமையிலான ஆட்சி, இந்த ஆண்டு பரந்த இந்தோ-பசிபிக் முன்னேற்றங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுவதன் மூலம் சீனாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்த முயன்றது.

மேலும் இதன் ஒரு அங்கமாக அமெரிக்காவுடன் மாலைதீவு முதல் வருடாந்திர பாதுகாப்பு உரையாடலில் ஈடுபட்டுள்ளது, அத்துடன் அமெரிக்காவின் இராஜதந்திர பணியை தனது நாட்டுக்கென நடத்துவதற்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறிருக்க, மாலைதீவிலிருந்து வாங் யி இலங்கைக்குச் சென்றார். இலங்கை ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அந்நாட்டில் 2021 நவம்பரில் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததுள்ளது.

இதனால் இலங்கையால் ஆகக்கூடியது ஒரு மாதத்திற்கான இறக்குமதியை மட்டுமே தக்கவைக்க இயலுமாக உள்ளது.

அதுமட்டுமன்றி இலங்கையில் பெருகிவரும் கடன்தொகையானது, நாணய நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கம் ஆகியவை காரணமாக இறையாண்மை தொடர்பான கரிசனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, சுற்றுலாவை ஊக்குவித்தல், முதலீடுகள் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் வாங் யீ நடத்திய பேச்சுவார்த்தையின் போது, பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தச் சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. வாங் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிதாக மன்றமொன்றை நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.

உலக அபிவிருத்திக்கான மையத்தின் கூற்றுப்படி, சீனாவின் ஒரே மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் கீழ் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரண்டும் கடன் தொல்லைக்கு ஆளாகின்றன.

மாலைதீவுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்று கருதப்படுகிறது, அதேநேரத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படக்கூடியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது,

மேலும் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, சீன உயரதிகாரியும் அவரது தூதுக்குழுவும், இலங்கைக்கான விஜயத்தின் பின்னணி, சீனாவில் ஆபிரிக்கக் காலடியில் முழுமையாக தங்கியிருக்காது தெற்காசியாவுக்கும் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி நகர்த்துவதாகும்.

ஏனென்றால், ஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கான நகரங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களின் இலக்கு தோல்வி கண்டுவிடும் என்ற அச்சம் சீனாவுக்கு உள்ளது. ஆகவே தான் தற்போது தெற்காசியா நோக்கி நகர்ந்திருக்கின்றது.

இதையும் படிங்க

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு | 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின்...

தேவையேற்படின் இருவாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்

அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இரு...

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை...

புலம்பெயர் சமூகம் இலங்கையில் இதனைச் செய்ய வேண்டாம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை செய்யக்கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்...

எத்தனால் பற்றாக்குறை – மதுபான உற்பத்தி பாதிப்பு

மதுபான உற்பத்திக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட எத்தனால் ஸ்பிரிட் இருப்புக்கள் இல்லாததால் எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி பாதிக்கப்படும் என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மாம்பழம் இப்படி தான் சாப்பிட வேண்டும் இல்லை துன்பமெ

ஒரு கோடைக்கால பழம். இப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி, உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிட...

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன்(21.5.2022)

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள். ...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

பாத்திரங்களை கழுவாமல் இருப்பது ஆபத்தை உண்டாக்கும்

பாத்திரங்களை பிளாஸ்டிக் அல்லது சிலிகான் பிரஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அவை பயன்படுத்தப்படாத போது உலர்ந்திருக்கும். ஆனால் ஸ்பான்ச்...

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம்...

பகிடிவதை தொடர்பில் பல்கலை மாணவர்கள் 35 பேர் கைது

மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்தமை தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய வளாக மாணவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர் ஒருவர்...

பிந்திய செய்திகள்

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

வீட்டுக்கு அழைத்து நடிகை பலாத்காரம் செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நடிகர் விஜய்பாபு கேரளா திரும்பினால் முன்ஜாமீன் என்று நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை மகளிர் அணியை 6 விக்கெட்களால் வெற்றி கொண்டது பாகிஸ்தான் மகளிர் அணி

இலங்கை - பாகிஸ்தன் மகளிர் அணிகளுக்கு இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச...

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு | 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின்...

தேவையேற்படின் இருவாரங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகளில் திருத்தம்

அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று விலை சூத்திரத்திற்கமையவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இரு...

இலங்கை ஜனாதிபதி எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

மிக மோசமான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

நாட்டின் விவசாயத்துறை பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பெரும்போக விவசாய செய்கை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் சிறுபோக விவசாய செய்கையும் வீழ்ச்சியடைந்தால் மிக மோசமான உணவு பற்றாக்குறையை...

துயர் பகிர்வு