May 28, 2023 5:31 pm

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்ய கோரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அவசரகால பிரகடன அமுலாக்கத்தை இரத்து செய்யுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவசரகால பிரகடனத்தை அமுல்படுத்துவது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலப்பெட்டபெந்தி ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்