0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.