அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில், 54பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதுபற்றி,முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 1மணிக்கும் 5மணிக்கும் இடையில் இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
ஆசிரியரும் அவரது மனைவியும் அவர்களது ஒரு வயது பெண் குழந்தையும், வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அவர்கள் தூங்கி அறையை பூட்டிவிட்டு மற்றைய அறையை திறந்து அங்கிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரியில் இருந்த மூன்று தாலிக்கொடி அடங்கலாக 54பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதேநேரம் இரு நாட்களுக்கு முன்னரும் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் மாலையை அறுக்க ஒருவர் முற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.