செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது

எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது

0 minutes read

கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கப்பலுக்கு செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக சுமார் 2 கோடி ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (15) முதல் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.