அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்,   உரப்பைக்குள் சடலம் இடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம், 5 அடி 8 அங்குல உயரமானது எனவும், கறுப்பு நிற கட்டை காற்சட்டை மற்றும் நீல நிற மேற்சட்டை, கறுப்பு நிற கல் பதித்த வெள்ளி நிற மோதிரமும் அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆரம்ப கட்ட நீதவான் மரண விசாரணை இடம்பெற்றுள்ளதோடு, சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் (06) பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.

ஆசிரியர்