எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு 30பேரடங்கிய ஆதிவாசிகள் குழு கண்டிக்கு விஜயம் செய்து தேன் பூஜையை செய்தனர். ஆதிவாசி தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ 26ஆவது முறையாக இந்த பூஜையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

வரலாற்றுக்காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் பழங்குடி தலைவர்கள் இந்த தேன் பூஜையை மிகுந்த பய பக்தியுடன் பெரஹராவின், போது செய்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்