மன்னாரில் 10 கிலோகிராமிற்கும் அதிக ஐஸ் (ICE) போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை இராணுவத்தினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, தலைமன்னாரிலிருந்து பயணித்த கெப் வாகனத்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
