செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இன்று போராட்டம்

வடக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இன்று போராட்டம்

0 minutes read

வடக்கு மாகாணத்தில் முப்படையினருக்குக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் அதிகாரிகளுடனான கூட்டத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

வடக்கில் படை முகாம்களை நில அளவை செய்து சுவீகரிப்பதற்குத் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் காணிகளை வேறு வழிகளில் பெறுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் பிரதேச செயலர்களை வடக்கு மாகாண ஆளுநர் தனது செயலகத்துக்கு இன்று அழைத்துள்ளார். இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பாகின்றது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பு நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.