யாழ். விபத்தில் குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தர்மடத்தைச் சேர்ந்த க. செறிஸ்டன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்