June 4, 2023 10:49 pm

அதிரடியாக அரசியலில் குதிக்கின்றார் ரத்நாயக்க! – அவரே அறிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“அரசியலுக்கு வருவதற்கு எனக்கு இருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. இனி மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயார்.”

– இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து ஜனக ரத்நாயக்க பதவியை இழந்தார். அதன்பின்னர் ஊடகங்களிடம் அவர் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“75 வருடகால சாபத்தில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களுக்காக மக்கள் பக்கம் நின்று சேவையாற்ற நான் தயார்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்