December 7, 2023 7:15 am

வவுனியாவில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் இன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 58 வயதான அழகையா மகேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவர் கல்லால் எறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், மண்வெட்டியுடன் அவரை விரட்டிச் சென்றுள்ளார்.

தப்பியோடியவர் பக்கத்திலுள்ள தனது வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த இடியன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்