October 4, 2023 3:41 am

ரஜரட்ட பல்கலையில் மட்டக்களப்பு மாணவன் சாவு! – நீச்சல் தடாகத்திலிருந்து சடலம் மீட்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த முருகதாஸ் திலக்சன் என்ற 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவன், பல்கலைக்கழகத்தின் ஏனைய மாணவர்கள் குழுவுடன் நேற்று மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்றிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்