செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் | டக்ளஸ்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் | டக்ளஸ்

1 minutes read

தான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவராக இருந்து இருந்தால், கூட்டங்களில் இவ்வாறான அநாகரிக செயல்கள் நடக்க அனுமதிக்கமாட்டேன் என கூறிய யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் தலைவரும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது கட்சியின் அலுவலகத்தில்  வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மாத்திரமின்றி நாடாளுமன்றத்திலும் அநாகரிக வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த காலங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவராக நான் இருந்த போது கூட்டங்களை திறமையாக நடத்தினேன். எனது கூட்டங்களில் இவ்வாறான அநாகரிக செயற்பாடுகளுக்கு அனுமதிக்க மாட்டேன்.

மீண்டும் ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவராக வருவேன். அப்போது எப்படி கூட்டங்களை நடத்துகிறது என பாருங்கள் என தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , தெல்லிப்பழை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டு குழப்பங்களை உண்டு பண்ணியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்ட நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டாவாறு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.