செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ரயிலில் இருந்து விழுந்து காயம்!

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ரயிலில் இருந்து விழுந்து காயம்!

1 minutes read

அம்பேவல பகுதியில், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலின் வாசல் பகுதியில் நின்று கொண்டு, மலையகத்தின் அழகிய சூழலைப் பின்னணியாகக் கொண்டு செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற போதே அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டுப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓடும் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்குவது, ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்ப்பது மற்றும் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்  திணைக்களம் பயணிகளிடம் மீண்டும் மீண்டும் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான அலட்சியச் செயல்கள் கடுமையான அல்லது உயிராபத்தான விபத்துகளுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.