Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும்!

‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும்!

1 minutes read

வாஷிங்டன்,
இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அந்த நாடு ‘எச்-1பி’ விசா வழங்குகிறது. இந்த விசாக்களை நம்பித்தான் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

ஆனால் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்த விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். இதன் காரண மாக ‘எச்-1பி’ விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அமெரிக்காவை இந்திய தொழில் வல்லுனர்கள் எளிதில் அடைவது பற்றி குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் ‘எச்-1பி’ விசா எளிதில் கிடைக்கச்செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தகவலை வெளியறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா, வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More