ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் புதிய ஆட்கொல்லியான ‘இபோலா’ வைரஸ் நோய்க்கு 57 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் தற்போது புதுவிதமான ‘இபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது.
இந்த நோய் ‘இபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, தசைகளில் கடும் வேதனை, தலைவலி ஏற்படும். அதன் பின்னர் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு உருவாகும். அதைத்தொடர்ந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறையும். சிலருக்கு ரத்த போக்கு பிரச்சினையும் ஏற்படும்.
இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். இந்த நோய் தாக்கியவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் தாக்கி இதுவரை 57 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 729 பேர் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயை உண்டாக்கும் இபோலா வைரஸ் கிருமிகள் குரங்குகள் அல்லது பழம் தின்னும் வவ்வால்களிடம் இருந்து பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுஒரு தொற்று நோயாகும். ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவி வருகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நோய் பரவாமல் தடுக்கும்படி சர்வதேச நாடுகளை எச்சரித்துள்ளது.