செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை!

1 minutes read

கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுள்ளன.

அதாவது, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள், சுமார் 57 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நான்கு இடங்களில் இடி மின்னல் பாதுகாப்பு பொறிமுறையினை அமைப்பதற்காக சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கொட்டடி, நாவாந்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள வலை ஒழுங்குபடுத்தும் மண்டபங்களை புனரமைப்பதற்காக சுமார் 119 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கடற்றொழில் திணைக்களத்தினால் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு, வீதி மின் விளக்குகள் பொருத்துதல் உட்பட சுமார் 17 வேலைத் திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.