செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திருமண நாளில் கணவர் பற்றி சமந்தா இட்ட பதிவு!

திருமண நாளில் கணவர் பற்றி சமந்தா இட்ட பதிவு!

1 minutes read

தன்னுடைய நான்காவது திருமண நாளில் சமந்தா பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்துஇருந்தது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்தது.

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது.  

இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி ‘ என்ற நாகர்ஜுனாவின் குடும்ப பெயரை நீக்கிவிட்டு தன் பெயரின் முதல் எழுத்தான வெறும் ‘S’ என்று மட்டும் வைத்து இருந்தார். அப்போதில் இருந்தே சமந்தா விவகாரத்து சர்ச்சை வைரலானது. இப்படி ஒரு நிலையில் கடந்த 2 ஆம் தேதி இவர்கள் இருவருமே தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னர் சமந்தா தொடர்ந்து நடித்து வந்ததாலும் பெமலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்ததாலும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இன்று சமந்தாவின் 4வது திருமண நாளில் சமந்தா தன் செல்ல நாய்களின் புகைப்படத்தை இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், தன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சமந்தா, ”பழைய காதலின் பாடல்கள் – மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம்.

தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி” என்று பதிவிட்டுள்ளார். இதே சமந்தா கடந்த ஆண்டு தன் திருமண நாளில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, நீ எனக்கானவன் நான் உனக்கானவன் எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கனவா என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.