செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சத்து நிறைந்த குதிரைவாலி காய்கறி சூப்

சத்து நிறைந்த குதிரைவாலி காய்கறி சூப்

1 minutes read

காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். இன்று குதிரைவாலி அரிசி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி- கால் கப் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – 1 கப்,
பச்சை பட்டாணி – கால் கப்
வெங்காயம் – 1,
தக்காளி – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
புதினா, கொத்தமல்லி – கைப்பிடி அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், மிளகுப் பொடி – தலா 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி பூண்டு நன்றாக தட்டி வைக்கவும்.

குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து வதக்கவும்.

அடுத்து சுத்தம் செய்த குதிரைவாலியைச் சேர்க்கவும்.

ஐந்து கப் நீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்.

பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, உப்பு, மிளகுத் தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறவும்.

இப்போது சூப்பரான குதிரைவாலி காய்கறி சூப் ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.