ஆசியக் கிண்ணப் போட்டியில் ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும்; அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டுபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்க தவறியது.
இதன்படி வீரர்கள் மற்றும் வீரர்களின் உதவியாளர்களுக்கான ஐ.சி.சி ஒழுக்க விதிகளின் 2.22 ஷரத்தின் பிரகாரம் இரண்டு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் தலா 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணித் தலைவர்களும் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை.
