செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காலியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

காலியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

காலி, அஹுங்கல்ல – போகஹாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி சேனா அப்ரூ என்ற 56 வயதுடைய குடும்பஸ்தரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

அவர் தனது வீட்டில் இருந்தபோதே இந்தத் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த குடும்பஸ்தர், பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.