செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்றவர் யானை தாக்கிப் பலி!

மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்றவர் யானை தாக்கிப் பலி!

0 minutes read
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.

நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

சம்பவத்தின்போது இவரது மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார் என்றும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.