செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி!

0 minutes read
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர், வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கதிர்காமநாதன் ரமேஷ்குமார் (வயது 48) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் இணைந்து உப்போடை பிரதேசத்தில் உள்ள வயலுக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று ஏறாவூர் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.