செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையகத்தில் ரயில் மோதி குடும்பஸ்தர் சாவு!

மலையகத்தில் ரயில் மோதி குடும்பஸ்தர் சாவு!

0 minutes read
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொட்டகலை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு நேர ரயிலில் மோதுண்டே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொட்டகலை, கங்கைபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வெள்ளைச்சாமி ஜெயக்குமார் (வயது – 40) எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ரயிலுடன் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.