செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு!

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு!

1 minutes read

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களான மேர்வின் சில்வா உட்பட மூவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.