செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேர்வின், பிரசன்ன உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மேர்வின், பிரசன்ன உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0 minutes read

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர் உட்பட ஐவரை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.