செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் 09 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் ஆபத்து!

09 மணி நேரத்திற்கு மேலான தூக்கம் ஆபத்து!

1 minutes read

நாள் ஒன்றில் அதிக மணித்தியாலங்கள் தூக்கம் செய்தலும் ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்படுகின்றது.

அதிக நேரத் தூக்கம் மூளை ஆரோக்கியம் மற்றும் மனச் சோர்வுக்கு வழிவகுக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது.

09 மணி நேரம் அல்லது அதற்கு மேல் இரவில் தூங்குபவர்கள் சிந்தனை மற்றும் நினைவாற்றல் சோதனைகளில் மோசமாக செயல்பட்டதாக UT Health San Antonio ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மனச்சோர்வின் அறிகுறிகளைக் காட்டியவர்களில் இந்த விளைவு இன்னும் வலுவாக இருந்நதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த ஆராய்ச்சியில் யாருக்கும் டிமென்ஷியா அல்லது பிற மனநல கோளாறுகள் இல்லை.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் அவசியம் என்றாலும், அதிகமாக தூங்குவது மூளையின் செயல்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று டொக்டர் சுதா சேஷாத்ரி கூறினார்.

இந்த ஆராய்ச்சி அறிக்கையை, “அல்சைமர் & டிமென்ஷியா” இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அரிசோனா, பாஸ்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் ஆராய்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.