பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவு. மட்டன், சிக்கன், மீன் எதுவாக இருந்தாலும், “பிரியாணி”க்கு ஒண்ணும் சமம் இல்லை. அதனால் தான், கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலே பிரியாணி செய்து ரசிக்க பலர் விரும்புகின்றனர்.
குறிப்பாக பண்டிகை நாளோ, சிறப்பு நாளோ இருந்தால் பிரியாணி ரெடி செய்வது குட்டி கல்யாணத்துக்கு சமம்!
ஆனா, வீட்டில் செய்யும் பிரியாணி எப்பொழுதும் அந்த ஹோட்டல் ஸ்டைல் பாய் பிரியாணி மாதிரி perfect taste கொடுக்காது என்பதே நம்ம அனுபவம். அதை சரி பண்ண இந்த 4 முக்கிய டிப்ஸ் உதவும்:
1. மசாலா குறைவு – சுவை அதிகம்
பிரியாணியில் மசாலா பொருட்களை அதிகமாக போட வேண்டாம். பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை லேசாக பொடித்து சேர்த்தால் சுவை நன்றாக balance ஆகும். Too much masala taste-ஐ கெடுத்துவிடும்.
2. வெங்காயம் ப்ரௌன் நிறம் வரும் வரை வதக்கவும்
வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதந்தால் தான் பிரியாணிக்கு அந்த deep flavour வரும். அதற்குப் பிறகுதான் மற்ற பொருட்களை சேர்க்கலாம்.
3. இஞ்சி–பூண்டு அளவு சரியாக
இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது, இஞ்சி அளவை விட பூண்டு கொஞ்சம் அதிகம் சேருங்கள். இது சுவையையும் மேம்படுத்தும், நெஞ்செரிச்சலையும் தவிர்க்கும்.
4. அரிசி ஊறிய பிறகே சேர்க்கவும்
தக்காளி, தயிர், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக வதக்கிய பிறகு, தண்ணீர் நன்றாக கொதிக்கட்டும். அதன் பிறகு முக்கால் மணி நேரம் ஊறிய பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
பின்னர் 40 நிமிடங்கள் தம் வைத்து சமைத்தால், கல்யாண வீட்டு ஸ்டைல் பாய் பிரியாணி சுவை அதே மாதிரி வரும்.