தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டரில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 14 பேர் பயணித்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாண பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
விசாரணையில், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.