செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா வியட்நாம் ஜனாதிபதி ட்ரான் டாய் குவாங் மரணம்!

வியட்நாம் ஜனாதிபதி ட்ரான் டாய் குவாங் மரணம்!

0 minutes read

வியட்நாம் ஜனாதிபதி ட்ரான் டாய் குவாங் வியட்நாமின் இராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியட்நாம் ஜனாதிபதியான ட்ரான் டாய் குவாங் (Tran Dai Quang) உயிரிழந்துள்ளார்.

61 வயதான ட்ரான் டாய் குவாங் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார்.

வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் Phd பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சராகவும் பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.