அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி டிரம்பின் திட்டமான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பதாகும்.
இதற்குரிய செலவினை மெக்சிகோ தர மறுத்து விட்ட நிலையில், உள்நாட்டு நிதி 5.7 பில்லியன் டாலர் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை ஜனாதிபதி டிரம்ப் கேட்டிருந்தார். ஜனநாயக கட்சி, டிரம்பின் இந்த திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் பல அரச துறைகளில் முடக்கம் ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் அரசுத்துறைகள் முடங்கியது, இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. 35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு டிரம்ப் உடன்பட்டார்.
