என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளப்
போவதில்லை உங்களுக்கு
அறிமுகம் செய்துக்கொண்டால் மட்டும்
உங்களால் எனக்கு
என்ன செய்துவிட முடியும்
நடப்பதை வேடிக்கைப்பாா்த்து
கழிவிரக்கம் கொண்டோ
பச்சாதாபம் கொண்டோ
பேச முடியும் உங்களால்
நூறு பேரிடமாவது!
இல்லையெனில் பெருத்த அமைதியில்
வருகின்ற ஆபத்தில் (வராமலும் போகலாம்)
தப்பிப் பிழைத்துக் கொள்ள
சொல்லவேண்டிய பொய்களை
முணுமுணுக்கலாம் உங்கள் வாய்.
எதுவும் வேண்டப்போவதில்லை
வேண்டப்போவது கிடைக்கப்போவதில்லை
எனத் தெரிந்த பிறகும்
மௌனத்தின் குரல்
பேரோசையாய் கேட்டுக்கொண்டே
இருக்கிறது பிடுங்கி எறியப்பட்ட
வேரடி மண்ணில்!
– கவிஞா் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)
