சுகாதார திணைக்களம் பொலனறுவையைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனையின் போதே குறித்த மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது சிறிசெவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் மாணவன் கல்வி பயிலும் ராஜாங்கன நவோத்தியா பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.