ஜி.வி.பிரகாஷின் வேண்டுகோள் | க்ரீன் சிக்னல் கொடுத்த நயன்தாரா, தாமதிக்கும் திரிஷா ஜி.வி.பிரகாஷின் வேண்டுகோள் | க்ரீன் சிக்னல் கொடுத்த நயன்தாரா, தாமதிக்கும் திரிஷா

வெயில் படத்தின் மூலம் இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்.

தற்போது ’பென்சில்’ படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்திற்கு பிறகு ஜி.வி, ’ ’த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆனால் இந்தப் படத்தின் தலைப்பை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யச் சென்றபோது அச்சங்கம் ஏற்கவில்லை. ஒருவர் பெயரை படத்துக்கு தலைப்பாக வைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று கூறிவிட்டார்களாம்.

இதையடுத்து படக்குழுவினர் நயன்தாராவை அணுகினர். கதையை கேட்டு தன் பெயரை படத்துக்கு வைக்க க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் நயன்தாரா. ஆனால் த்ரிஷா மட்டும் இன்னும் மௌனம் சாதித்து வருகிறாராம். சீக்கிரம் ஜிவிக்கு ஓகே சொல்லுங்க த்ரிஷா…

ஆசிரியர்