சாதனை மேல் சாதனை | கோச்சடையான் நிகழ்த்திய சாதனை!சாதனை மேல் சாதனை | கோச்சடையான் நிகழ்த்திய சாதனை!

ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘கோச்சடையான்.

இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். 3டி மோஷன் கேப்சர் அனிமேஷன் முறையில் முதன்முறையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் 23ம் தேதி (நாளை மறுதினம்) திரைக்கு வருகிறது. ரசிகர்களும் ஆர்வமுடன் தியேட்டர்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் சென்னையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதுவும் சென்னையில் மட்டும் கோச்சடையான் ஒரே நாளில் 300 காட்சிகள் திரையிடப்படுகிறது. இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு வேறு எந்த படமும் இத்தகைய சாதனையை நிகழ்த்தியதில்லையாம்.

அட போங்க… கோச்சடையான் இன்னொரு சாதனையும் செய்திருக்கு. அதுவா, ஆறு முறை ரிலீஸ் தேதியை அறிவித்து பின்பு அதை தள்ளிவைத்ததுதான். சரிதான…

ஆசிரியர்