December 7, 2023 4:53 am

உடல்நலக் குறைவு | மருத்துவமனையில் மனோரமா அனுமதிஉடல்நலக் குறைவு | மருத்துவமனையில் மனோரமா அனுமதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகை மனோரமா (71) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனோரமா, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவருக்கு மூச்சுத் திணறல் இருந்து வந்தது. இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். சளித் தொற்றின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து இதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையை அடுத்து மனோரமாவின் உடல் நலன் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் சில நாள்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு மனோரமாவை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்